கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எந்தெந்த பேருந்துகள் வந்து செல்லும்: அமைச்சர் சிவசங்கர்

சனி, 30 டிசம்பர் 2023 (12:26 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக இந்த பேருந்து நிலையம் செயல்படும் என்று தெரிகிறது 
 
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பேருந்துகள் மற்றும் முழுமையாக இங்கிருந்து கிளம்பும் பேருந்துகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: 
 
கோயம்பேட்டில் இருந்து தென்பகுதிக்கு செல்லக்கூடிய பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தே செல்லும். அரசு விரைவு போக்குவரத்து கழகம் நாளையிலிருந்து முழுமையாக இங்கு செயல்படும்.
 
மாநகர பேருந்துகள் இங்கிருந்து கோயம்பேடு வரை இயக்கப்படும், கிண்டிக்கு 3 நிமிட இடைவெளியில் ஒரு பேருந்து இயக்கப்படும். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படும்’ என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்