அறைக்குள் முடித்த அமைச்சர் விஜயபாஸ்கர்: மக்கள் எதிர்ப்பால் தலைகீழாக மாறிய நிலைமை!

ஞாயிறு, 19 மார்ச் 2017 (15:02 IST)
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, தீபா அணி என மூன்றாக பிரிந்து கிடக்கிறது. இதில் சசிகலா அணி பக்கம் பெரும்பாலான அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இருந்தாலும் இந்த அணிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.


 
 
சில இடங்களில் அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சொந்த கட்சியினரால் மற்றும் பொதுமக்களால் விரட்டப்பட்ட சம்பவங்களும் நடந்தன. மேலும் அமைச்சர் பங்கேற்கும் விழாக்களில் அதிமுக முன்னோடிகள், உறுப்பினர்கள் கலந்து கொள்வதும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
 
இதனால் நலத்திட்ட உதவிகளையே ஆடம்பரம் இல்லாமல் அறைக்குள்ளே வைத்து வழங்கும் நிலமைக்கு வந்து விட்டனர். பொதுவாக நலத்திட்ட உதவிகளை அரசியல்வாதிகள் மேடை அமைத்து கூட்டம் கூட்டி அனைவருக்கும் தெரியும் வகையில் செய்வார்கள்.


 
 
ஆனால் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக முதல்முறையாக அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அலுவலக அறைக்குள்ளேயே முடிந்துள்ளது. சில நாட்களாக அமைச்சர் பங்கேற்கும் விழாக்களில் அதிமுக முன்னோடிகள், அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொள்வது குறைந்து விட்டது.
 
அதன் கரணமாகவே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஓரு அறைக்குள்ளயே நடத்தி முடித்துவிட்டார்கள் என அதிமுக சீனியர்கள் பேசிக்கொள்கிறார்கள். சசிகலா தலைமை பிடிக்காமல் பலரும் ஓபிஎஸ் அணிக்கும் தீபா அணிக்கும் போய்விட்டதால் தொண்டர்கள் பலர் அமைச்சர் பங்கேற்கும் விழாக்களை புறக்கணித்து வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்