”நவீன ராஜராஜசோழன்” எடப்பாடியாருக்கு புது பட்டபெயர்!!

வியாழன், 13 பிப்ரவரி 2020 (12:42 IST)
டெல்டா குறித்த புது அறிவிப்பால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நவீன ராஜராஜசோழன் என புகழப்பட்டுள்ளார். 
 
டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 
 
டெல்டா பகுதி மட்டுமின்றி புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். 
 
இந்நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் 1 லட்சம் மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அறிவித்தார். 
 
நாம் கரிகாலனை பார்த்து இருக்கிறோம், ராஜராஜசோழனை பார்த்து இருக்கிறோம். இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரை நவீன ராஜராஜசோழனாக தமிழ்நாடு பார்க்கிறது என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்