தமிழகத்தில் கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டது: அமைச்சர் மா சுப்பிரமணியன்

ஞாயிறு, 2 ஜனவரி 2022 (10:29 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தொடங்கி விட்டது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் இணைந்து 3-வது அலையாக பரவுகிறது என்றும் ஆனால் அதே நேரத்தில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று முதல் நான்கு நாட்களிலேயே நெகட்டிவ் என ரிசல்ட் வந்து விடுகிறது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து மூன்றாவது அலையில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்