ஸ்டாலினின் சொந்த ஆசைகளை எல்லாம் நிறைவேற்ற முடியாது: அமைச்சர் காமராஜ்

ஞாயிறு, 14 ஜூன் 2020 (11:59 IST)
சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றி சுகாதாரத் துறையை முதலமைச்சர் தனது கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் காமராஜ், ‘முக ஸ்டாலின் அவர்களின் சொந்த ஆசைகளை எல்லாம் நிறைவேற்ற முடியாது என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை மாற்றியது குறித்து நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், ‘அதிமுக அரசின் அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலியாகி வருவதாகவும், கொரோனா தொடர்பாக ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் முரண்பாடுகள் இருப்பதாகவும், கொரோனா மிக வேகமாக பரவி வரும் இந்த வேளையில் நாளுக்கு நாள் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார் 
 
மேலும் சுகாதாரத்துறை செயலாளரை மாற்றியது போல் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றியிருக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் அவரை மாற்ற வேண்டுமென ஏற்கனவே நடுநிலையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், சுகாதாரத் துறையை முதல்வர் தன் வசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த கருத்தை அலட்சியப்படுத்தக் கூடாது என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்
 
இந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் தான் அமைச்சர் காமராஜர் அவர்கள் ’முக ஸ்டாலின் அவர்களின் சொந்த ஆசையை எல்லாம் நிறைவேற்ற முடியாது என்று கூறியுள்ளார் அமைச்சரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்