இந்த திட்டத்தின் மூலம் எட்டு நாட்களில் 2 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக திமுக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கு மொபைல் எண் மற்றும் ஓடிபி மூலம் பதிவு செய்வது மட்டுமே போதும் என்பதால் ஆவணங்கள் சரிபார்ப்பு முறை இதில் இல்லை என்பதாலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் இது குறித்து அதிமுக அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, குடும்ப உறுப்பினரான நயன்தாராவுக்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கலாம். அதை நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், ஒரே நாளில் 72 லட்சம் பேரை எப்படி சேர்க்க முடியும். ஒசாமா பின்லேடன், ட்ரம்ப் உள்ளிட்ட பெயர்களில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவொரு ஏமாற்று வேலை அனைத்து பெருமையும் பிரசாத் கிஷோருக்கே சேரும் என கூறியுள்ளார்.