சென்னையில் லேசான நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி!

செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (13:22 IST)
சென்னையில் உள்ள பல பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை அருகே உள்ள வங்க கடல் பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதேபோல் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து 796 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த நிலநடுக்கம் காரணமாக சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை நுங்கம்பாக்கம், கேகே நகர், அம்பத்தூர், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது என பொதுமக்கள் கூறியுள்ளனர் 
 
சென்னை மற்றும் காக்கிநாடா பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது மக்கள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்