பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வியாழன், 11 நவம்பர் 2021 (09:58 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனை தமிழகம் முழுக்க மழை பெய்து வருகிறது.
சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே இன்று மாலை கரையைக் கடக்கவுள்ள நிலையில் தற்போது சென்னையிலிருந்து தென் கிழக்கில் 170 கீ.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளது.