வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம்

வியாழன், 23 செப்டம்பர் 2021 (07:12 IST)
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றினாள் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்