இதற்கிடையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென அவசர சிகிச்சை பிரவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அவர் மருத்துவ குழுவினரின் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்ததாக தந்தி டிவியின் தலைமை செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே செய்தி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை தந்தி தொலைக்காட்சி முதலில் வெளியிட்டது.