அப்போது மருத்துவமனைக்கு செல்ல, தன் உடைமைகளோடு வந்த முதியவர் தன்னுடைய பையை ஆம்புலன்ஸ் அருகே வைத்துவிட்டு அதிகாரிகளை அதை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, அருகில் உள்ள கடைக்கு சென்று பக்கோடா பார்சல் வாங்கி வந்துள்ளார். இந்த சம்பவமானது ஆம்புலன்ஸில் வந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முதியவர் கையில் கையுறையும் முகத்தில் மாஸ்க்கும் அணிந்திருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் முதியவரின் அந்த பொறுப்பற்ற செயல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.