இதையடுத்து, திருச்சி சமயபுரத்தில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்து, பைக் சாகசத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் மொத்தம் 13 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் 7 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் வீலிங் செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் இளைஞர்கள் மீது புகாரளிக்க இலவச எண் அறிவிக்கப்பட்ட நிலையில், கரூர் – திருச்சி சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட தங்க பாண்டியனை போலீஸார் கைது செய்தனர்.