நாய் கடித்ததால் உரிமையாளரை கைது செய்த போலீஸ்: சேலத்தில் பரபரப்பு

ஞாயிறு, 29 நவம்பர் 2020 (15:35 IST)
நாய் கடித்ததால் உரிமையாளரை கைது செய்த போலீஸ்: சேலத்தில் பரபரப்பு
சேலத்தில் நாய்  கடித்ததாக ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சேலத்தில் உள்ள சின்னதிருப்பதி என்ற பகுதியை சேர்ந்த ஹரி விக்னேஷ் என்பவர் தன்னை நாய் கடித்து விட்டதாகவும் நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
 
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நாயின் உரிமையாளர் பிரபாகர் என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். செல்லப்பிராணியை அஜாக்கிரதையாக பராமரித்தல் உட்பட மூன்று பிரிவுகளில் போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
நாய கடித்தததாக அளித்த புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்