ஜெயலலிதாவுக்காக மதுரையில் கட்டிய கோவில்; முதல்வர் திறந்து வைக்கிறார்!

சனி, 30 ஜனவரி 2021 (08:26 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மதுரையில் கட்டப்பட்டுள்ள கோவிலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு, சிலை திறப்பு என அதிமுக பிஸியாக இயங்கி வருகிறது. இந்நிலையில் மதுரை திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூரில் ஜெயலலிதாவுக்காக 12 ஏக்கரில் கோவில் கட்டப்பட்டுள்ளது.

இன்று அந்த கோவிலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கும் நிலையில் கோபுர கலசங்களுக்கு யாகசாலை பூஜை நடத்தி புனித நீர் தெளிக்கப்பட உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்