கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதரை மிரட்டியதாக கடந்த மாதம் 9ம் தேதி மேலும் ஒரு வழக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பதியப்பட்டது.