கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவ மழை மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளிட்டவற்றால் கேரளாவின் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இடுக்கி, கோட்டயம் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழையின் காரணமாக கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.