தமிழன் என்று சொல்லடா! தள்ளாடி நில்லடா: நடிகை கஸ்தூரியின் புதிய தாரக மந்திரம்

திங்கள், 28 அக்டோபர் 2019 (18:04 IST)
காலங்காலமாக ’தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற தாரக மந்திரத்தையே தமிழர்கள் அனைவரும் பயன்படுத்தி வரும் நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ’தமிழன் என்று சொல்லடா, தள்ளாடி நில்லடா’ என்று குறிப்பிட்டு தமிழக அரசை கிண்டல் செய்யும் வகையில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார் 
 
குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்று திரைப்படங்கள் உள்ளிட்ட அனைத்திலும் விளம்பரம் செய்து வரும் அரசு, குடிப்பழக்கத்தை மக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் தீபாவளி தினங்களில் அதிக மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்தது.
 
இந்த இலக்கின்படி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 130 கோடி ரூபாய்க்கு அதிகமாக மது விற்பனை செய்து தமிழக அரசின் டாஸ்மாக் சாதனை செய்துள்ளது. அதாவது இந்த ஆண்டு அக்டோபர் 25 20 6 27 ஆகிய மூன்று நாட்களில் 455 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்து உள்ளது இந்த நிலையில் இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகை நடிகை கஸ்தூரி:
தமிழகம் - அசுர சாதனை!*
 
டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது.
 
25-10-2019 = 100cr 26-10-2019 = 183 cr 27-10-2019 = 172 cr ஆகமொத்தம் 455 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது. தமிழனென்று சொல்லடா, தள்ளாடி நில்லடா ! என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்