கரூர் நகராட்சியில் இனி அந்த வேலைகளுக்கு இடமில்லை - எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி

வியாழன், 7 நவம்பர் 2019 (20:48 IST)
கரூர் நகராட்சியில் இனி அந்த வேலைகளுக்கு இடமில்லை – குடிநீரை அவரவர் செளரியத்திற்கு எடுக்க முடியாது இனி அனைவருக்கும் ஒரே விதமான குடிநீர் தான் – கரூர் அருகே தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி தெரிவித்துள்ளார்.

கரூர் அடுத்த ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சி, சின்ன ஆண்டாங்கோயில் மெயின்ரோடு ஸ்டேட் பாங்க் காலனி அருகில் வடிகால் அமைக்கும் பணியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கவிதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நமது கரூர் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை தீட்டி கொடுத்து வருகின்றார்.

மக்களுக்கான மருத்துவக்கல்லூரியினை கொடுத்தவர் என்றும், சுற்றுப்புற சாலைகள் என்று பல்வேறு திட்டங்களை முதல்வரும், துணை முதல்வரும் தீட்டி வருகின்றனர் என்றார். மேலும், 21 கோடியே 13 லட்சம் மதிப்பிலான அம்மா சாலை கரூர் ரயில்நிலையம் டூ தேசிய புறவழிச்சாலை திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆங்காங்கே 30 கோடி மதிப்பில் சிறப்பு தொகையினை சாலைகள் அமைக்கும் பணிக்காக வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், காவிரி குடிநீர் இனி, அனைவருக்கும் சமமாக தான் வரும், முன்பெல்லாம், ஒரு இஞ்சு பைப், இரண்டு இன்ச் பைப் என்றெல்லாம் இருந்தது. ஆனால் இனி அந்த வேலைகளுக்கு இனி இங்கு இடமில்லை என்றதோடு, அனைவருக்கும் ஒரே விதமான கூட்டுக்குடிநீர் திட்டம் போல் தான் இருக்கும் என்றார். ஏற்கனவே அது போல நடந்ததை சுட்டிக்காட்டிய அவர், குழிக்குள் இறங்கி தான் முன்பெல்லாம் தண்ணீர் பிடிக்கும் அவலநிலையும், ஏற்பட்டுள்ளது ஏனென்றால் மோட்டர் போட்டு தான் தண்ணீர் பிடிக்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆகவே திட்டங்களையெல்லாம் அரசு சிறப்பாக செயல்படுத்துகின்றது அதே நேரத்தில் தனி மனித ஒழுக்கம் மிக, மிக அவசியம் தேவை, அப்போது தான் சட்டத்தினை செயல்படுத்த முடியும் என்றார். மேலும், ஆங்காங்கே அதிகாரிகள் டெங்கு கொசுக்கள் இருக்கின்றதா ? இல்லையா ? என்று சோதனை இட்டு அபராதம் விதித்தால் கூட போன் செய்கின்றார்கள்., அரசு என்பது மக்களுக்கானது என்றும் அதை மதித்து மக்களும் இணைந்து செயல்பட்டால் தான் எந்த ஒரு திட்டத்தினையும் செயல்படுத்த முடியும் என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்