மோடியை திமுக செயல் தளபதி மு.க.ஸ்டாலின் வரவேற்று வீட்டின் உள்ளே அழைத்து சென்றார். அருகில் கனிமொழி, துரை முருகன் ஆகியோர் இருந்தனர். கருணாநிதியின் கைகளை பிடித்துக்கொண்ட மோடி, ஓய்வு எடுக்க டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வருமாறு கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார். அப்போது, முரசொலி பவளவிழா மலரை பிரதமர் மோடிக்கு கருணாநிதி பரிசாக வழங்கினார். சுமார் 15 நிமிடங்கள் அங்கிருந்த மோடி அதன் பின் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
அப்போது, கருணாநிதியை பார்க்க வேண்டும் என வெளியே கூடியிருந்த தொண்டர்கள் குரல் எழுப்பினர். இதையடுத்து, அவரை வீட்டின் கீழே அழைத்து வந்து தொண்டர்களிடம் காண்பித்தார் ஸ்டாலின். அப்போது, தொண்டர்களை பார்த்து கருணாநிதி இரண்டு முறை கையசைத்தார். இதைக்கண்டு அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.