காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவர் கர்நாடக முதல்வராகவும், மகாராஷ்டிரா மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர். சித்தராமையா கர்நாடகாவின் முதல்வரான பிறகு எஸ்.எம்.கிருஷ்ணா புறக்கணிக்கப்பட்டார்.
இதையடுத்து இவர் நாளை பாஜக-வில் இணைகிறார். இவர் பாஜக-வில் இணைந்த பிறகு எப்போதும் வேண்டுமானாலும் இவர் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. தற்போது பொறுப்பு ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவ் இரு மாநிலங்களை கவணித்து வருவதால், பணிச்சுமை அதிகமாக உள்ளது.