இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளூர் மக்களின் பணம் பறிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த சுங்கச்சாவடியை அகற்றப்பட வேண்டும் என்று திருமங்கலம் தொகுதி மக்கள் முழு கடை அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கப்பலூர் சுங்கச்சாவடி தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்தநிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார், சுங்கச்சாவடி தொடர்பாக பொதுமக்களிடத்தில் மனுக்கள் வாங்க சென்றார். ஆனால் போலீசார் அனுமதி மறுத்த நிலையில் கடும் வாக்குவாதத்திற்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டது.