காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி தொடர்வார்.. மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு..!

Mahendran

திங்கள், 29 ஜூலை 2024 (13:09 IST)
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அவர் மேயராக தொடர்வார் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 29ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாநகராட்சி கூட்டத்திற்கு ஒரு உறுப்பினர் கூட வரவில்லை. இதனை அடுத்து மேயராக மகாலட்சுமி தொடர்வார் என மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் அறிவித்துள்ளார்.

முன்னதாக மேயர் மகாலட்சுமிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் உள்பட பல கவுன்சிலர்கள் ஆணையரிடம் புகார் அளித்ததால் தான் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானமே கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் திடீரென நேற்று 30 கவுன்சிலர்கள் வெளியூருக்கு சுற்றுலா சென்று விட்டதாகவும், மீதமுள்ள கவுன்சிலர்களும் இன்று மாநகராட்சி கூட்டத்திற்கு வரவில்லை என்றும் எனவே நம்பிக்கை இல்லா தீர்மானம் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இப்போதைக்கு மாநகராட்சி மேயர் மகாலட்சுமியின் பதவிக்கு ஆபத்து இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்