அப்போது பேசிய அவர் “தமிழக சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. மக்கள் நீதி மய்யம் தமிழக சட்டமன்ற தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ளும். எம்.ஜி.ஆரும் நானும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். சினிமாக்காரர்கள் என்ற இனத்தை சேர்ந்தவர்கள். மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்ற எம்.ஜி.ஆர் விரும்பினார். மக்கள் நீதி மய்யம் அதை செய்யும். நான் தேர்தலில் போட்டியிடுவது உறுதி.தொகுதி குறித்து பின்னால் அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.