காவிரி நதிநீர் வழக்கில் இன்று இறுதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு 177.25 டிம்.சி. நீரை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதேபோல், தமிழகத்தில் நிலத்தடி நீர் 20 டி.எம்.சி இருப்பதால், கர்நாடகாவிற்கு 14.75 டி.எம்.சி. கூடுதலாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும், காவிரி நீர் யாருக்கும் சொந்தமில்லை எனக்கூறியிருப்பது ஆறுதலை கொடுத்துள்ளது. இந்த நேரத்தில் இரு மாநில விவசாயிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். போராடுவது உதவாது. தீர்வு காண முயற்சிப்பதே சிறந்தது.