தேர்தலில் போட்டியா? நானா? ஜகா வாங்கும் கமல்!

வெள்ளி, 25 ஜனவரி 2019 (13:36 IST)
நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் அரசியலுக்காக தனது சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்தார். கட்சியை ஆரம்பித்தன் பின் எந்தவொருப் புதுப்படத்திலும் நடிக்கவில்லை. 
 
தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படமே அவரது கடைசி படம் என கூறப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கமல் அனைத்து தொகுதிகளிம் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் முன்னர் தெரிவித்திருந்தார். 
 
ஆனால், இப்போது மக்களவை தேர்தலில் உறுதியாக போட்டியிட மாட்டோம் என சொல்ல முடியாது என கூறியுள்ளார். ஆம், சென்னை தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அங்கு இவ்வாறு பேசினார். 
தமிழகம் பெரிய சோதனைகளை சந்திக்க உள்ளது. அதை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். தமிழக அரசியலில் முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பதில் மற்ற நாடுகளை விட நாம் பின்தங்கி இருக்கிறோம். 
 
நான் தாமதமாக அரசியல் பிரவேசம் எடுத்ததால் வருத்தம் உள்ளது. மக்களவை தேர்தலில் உறுதியாக போட்டியிட மாட்டோம் என சொல்ல முடியாது என்றும், அடுத்தடுத்து வரும் நிலைமையை பொறுத்து முடிவெடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளது அவர் நிலைபாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்