நீங்க அடுத்த சி.எம்.க்கு வண்டி ஓட்றிங்க: கமல் சென்ற பஸ் டிரைவருக்கு பாராட்டு

வெள்ளி, 30 நவம்பர் 2018 (21:00 IST)
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இன்று டெல்டா பகுதியில் கஜா புயல் பாதித்த பகுதிகளை இரண்டாவது முறையாக பார்வையிட்டார். இந்த முறை அவர் உள்புறமாக உள்ள கிராம பகுதிகளுக்கும் சென்று அந்த பகுதி மக்களின் வேதனையை பகிர்ந்து கொண்டார்

இந்த நிலையில் கஜா புயல் பகுதியை பார்வையிட்ட பின்னர் அங்கிருந்த ஒரு கிராமத்தில் இருந்து அரசு பேருந்தில் கமல்ஹாசன் பயணம்  செய்தார். முறைப்படி கண்டக்டரிடம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி கொண்ட கமல்ஹாசன், பின்னர் டிரைவரிடம் பேச்சு கொடுத்து கொண்டே பயணம் செய்தார். நீங்கள் என் வண்டியில் வருவதால்தான் பாதுகாப்புடன் வருகிறீர்கள் என்று டிரைவர் கமல்ஹாசனிடம் கூற பேருந்தில் இருந்தவர்கள் கலகலப்பாகினர்

அந்த நேரத்தில் ஒரு பயணி, 'நீங்க அடுத்த சி.எம்க்கு வண்டி ஓட்றிங்க' என்று டிரைவரை பாராட்ட அதற்கு கமல்ஹாசனும் பேருந்து டிரைவரும் சிரித்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்