திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம்பெறும் என்றும் அந்த கட்சிக்கு திமுக ஒரு தொகுதி ஒதுக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் கமல்ஹாசன் தரப்பு இரண்டு தொகுதிகள் கேட்டதாகவும் அதுமட்டுமின்றி தங்களது சொந்த சின்னமான டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தக்லைஃப் படத்திற்காக செர்பியா செல்ல வேண்டிய கட்டாயம் கமலஹாசனுக்கு இருந்தது. ஆனால் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை முடித்துவிட்டு தான் செர்பியா செல்ல வேண்டும் என்று முடிவு செய்த கமல்ஹாசன் செர்பியா பயணத்தை ரத்து செய்து விட்டதாகவும் அடுத்த கட்ட ஆலோசனை குறித்து அவர் இன்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.