கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பிரவீன், சேகர், மணிகண்டன், சுரேஷ், தனக்கொடி உள்ளிட்ட 8 பேர் உயிரிழப்பு என செய்தி வெளியாகியுள்ளது. மேலும் கள்ளச்சாராயத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 14 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.