கலைஞர் நினைவிடம்; முகப்பில் பெரிய பேனா! – நினைவிட மாதிரி புகைப்படம்!
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (13:46 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் மாதிரி புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு மறைந்தார். அவரது உடல் அவரது விருப்பப்படியே மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கலைஞர் கருணாநிதிக்கு 2.2 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் நினைவிடம் மெரீனாவில் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கலைஞர் கருணாநிதிக்கு அமைக்கப்பட உள்ள நினைவிடத்தின் கிராபிக் மாடல் வெளியாகியுள்ளது. சூரியன் போன்ற வளைவுகளை கொண்ட அந்த நினைவிடத்தின் முன் கருணாநிதியின் பேனாவை பெரிய அளவில் நினைவு சின்னமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.