மேலும் சிலர், அந்த வசனத்தை கொஞ்சம் மாற்றி பேசி இணையத்தில் வெளியிட்டனர். அதில் குறிப்பாக, சென்னையை சேர்ந்த ஒரு பெண் "பொண்டாட்டினா பழைய படத்துல வரமாதிரி தழைய தழைய பொடவை கட்டிகிட்டு, தல நிறைய பூவ வெச்சிகிட்டு... நெத்தி நிறைய குங்குமம் வெச்சிகிட்டு ‘ஏ பொண்டாட்டி’ அப்படின்னு கூப்பிட்ட உடனே, வந்து காலப் புடிச்சு.. சொல்லுங்க அத்தான்னு வந்து நிப்பாளே.. அந்த மாதிரி பொண்டாட்டின்னு நெனச்சியா... பொண்டாட்டிடா” என்று பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்தது.
அந்த வீடியோவை ரஜினியும் கண்டு ரசித்துள்ளார். எனவே அவரை நேரில் சந்திக்க விரும்பிய ரஜினி, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரிடம் பேச, அந்த பெண்ணுக்கு தலை கால் புரியவில்லையாம்.