ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லை என்பதால், அவரது சொத்துக்கள் தனியார் நபர் ஒருவருக்கு சொந்தமாக போவதாக அனைத்து வட்டாரங்களிலும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அவரது போயஸ் கார்டன் வீட்டை நினைவுச்சின்னமாக்க வேண்டும் என இணையதளங்களில் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் அவரது வங்கிக்கணக்கில் ரூ.3.84 லட்சம் இருப்பு தொகை உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. அதாவது, ஜெயலலிதா அரசியலுக்கு வரும் முன் செகந்திரபாத் அருகே உள்ள கிராமத்தில் ஒரு பண்ணை வீட்டையும், திராட்சை தோட்டம் ஒன்றையும் வாங்கினார்.