இந்நிலையில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி தி இந்து தமிழுக்கு அளித்த பேட்டியில், ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கு அவரது உடல்நிலை பற்றிய எல்லா தகவலும் தெரியும். அவர் நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கால் வலியால் அவதிப்பட்டதால் சரியாக நிற்கக்கூட முடியாமல் இருந்தார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு கால் வலி அதிகமாக இருந்ததால் சுற்றுப்பயணங்களையும், பொது நிகழ்ச்சிகளையும், பிரச்சார கூட்டங்களையும் கூட தவிர்த்து வந்தார். கடைசியாக ஜெயலலிதா கலந்துகொண்ட மெட்ரோ ரயில் நிலைய தொடக்க விழாவின்போது நிற்க முடியாமல் கை, கால்கள் நடுங்கும் நிலையில் இருந்தார்.