இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமர் இது தொடர்பானக் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார். அப்போது ‘அமமுக என்பது ஒரு கட்சியேக் கிடையாது. ஜெயலலிதாவின் பெயரையும் அவரது புகைப்படத்தையும் பயன்படுத்த அவர்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது. அம்மா என்பது ஜெயலலிதாவைதான் குறிக்கிறது. அவர்கள் அனைவரும் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள். வேண்டுமானால் தியாகத்தலைவி என சொல்லப்படும் சசிகலாவின் பெயரில் கட்சி ஆரம்பித்துக்கொள்ளட்டும்’ என அறிவுரை வழங்குவது போல கூறியுள்ளார்.