நான் வியந்த உலகத் தலைவர்கள் என்ற புத்தகத்தின் 372வது பக்கத்தில் ஸ்டாலின் குறித்து அவர் குறிப்பிட்டு இருந்ததாகவும், அதில் நான் வியந்த அரசியல் ஆளுமைகளில் தளபதியும் ஒருவர், தொடர்ந்து ஒரு மணி நேரம் என்னிடம் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசினார் என்றும், அவரின் நீண்ட கால அரசியல் திட்டங்கள் குறித்த அவரின் பேச்சுக்களை நானே தனிப்பட்ட முறையில் குறிப்பு எடுத்து அதனை இன்று வரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன் என்றும், இப்படிப்பட்ட ஒரு தலைவர் மற்ற நாடுகளில் இருந்தால் அவரை உலகமே தூக்கிக் கொண்டு இருக்கும் என்றும் ஜான் எலியாசன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததாக திமுகவினர் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர்.
மேலும் அந்த புகைப்படம் போலியானது என்றும் அதில் உள்ள பல விஷயங்கள் செயற்கையாக தயாரிக்கப்பட்ட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து திமுகவினர் போட்டோஷாப் மூலம் இந்த புகைப்படத்தை செய்துள்ளதாக ட்விட்டர் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர். முக ஸ்டாலின் தனது தொண்டர்களிடம் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்