வருவாய் மொத்த வருவாய் செலவினங்களுக்காக எவ்வளவு நீங்கள் செலவு செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியவர் அப்படி செலவு செய்ய வில்லை என்றால் வேலைவாய்ப்பு கிடைக்காது எனவும் மத்திய அரசுதான் தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே துறை, நீதிமன்றம், கம்யூனிகேஷன் நெட்வொர்க் என இவை அனைத்தையும் செலவு செய்கிறது, நாம் சாலை போடும்போது வேலைவாய்ப்பும் வருகிறதல்லவா, அதில் நம்ம ஊர் ஆட்களும் வேலை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது ,ஆகவே மத்திய அரசாங்கம் எல்லா மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக அதிகப்படியான செலவுகளை செய்து கொண்டிருக்கின்றது,அதுமட்டுமல்ல நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை உதாசீனப்படுத்தி மத்திய அரசாங்கம் எந்தவித செலவையும் எந்த ஒரு மாநிலத்திற்கும் செய்ய முடியாது எனவும் அவர்கள் கொடுத்துள்ள வழிகாட்டிகளை வைத்து தான் செய்ய முடியும்,விதிமுறைப்படி அவற்றை செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு, நமக்கு ஏதாவது தேவை இருக்கின்றது என்றால் தாராளமாக மத்திய அரசை கேட்கலாம் ,ஆனால் கேட்கின்ற முறைப்படி கேட்க வேண்டும்.