ஆனால், அது நடக்கவில்லை. இந்த நிலையில், திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதய நிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பேற்பாரா என்ற எதிர்பார்ப்பு திமுகவினரிடையே ஏற்பட்ட நிலையில், விரைவில் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில், நாளை மறு நாள்( டிசம்பர் 14 ஆம் தேதி), கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உதய நிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும், இதுகுறித்து ஆளுநர்ஆர்.என்.ரவியின் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ் நாடு சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், திராவிட இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சராவது சரியான அரசியல் முடிவு. முதலமைச்சரின் பணிச்சுமைகள் வெகுவாக குறையும். திராவிட இயக்க இளஞர்களின் அரசியல பயணத்திற்கு தேவைப்படுகின்ற தலைவராக அவர் இருப்பார். வருக! வாழ்க!வெல்க என்று வாழ்த்தியுள்ளார்.