இந்தியாவை பொருத்த வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் ஏற்கனவே கொரோனா தொற்று இருந்தவரின் குடும்பத்தில் மேலும் இருவருக்கும், ஈரோடு மற்றும் சென்னையில் தலா இருவரும் என 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டில் இருந்து வந்த அவரை பெற்றோர் பெற்றோர் , கொரோனா அச்சத்தின் காரணமாகழ் அவரை வீட்டில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.