இந்நிலையில் ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் ஷர்மிளா தற்கொலைக்கு பெற்றோர், சகோதரர்களே காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்த நிலையில் தற்போது ஷர்மிளா தற்கொலை விவகாரம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் நேரில் விசாரணை செய்து வருகிறார்.
முன்னதாக சென்னை பள்ளிக்கரணையில் சில மாதங்களுக்கு முன்பு பிரவீன் என்பவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார் என்ற நிலையில் அவருடைய மனைவி ஷர்மிளா தற்கொலை செய்து கொண்டார். பிரவீன் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஷர்மிளாவினுடைய தந்தையையும் மற்றொரு சகோதரனையும் கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஷர்மிளாவின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.