யூகோ வங்கியில் சிறுகுறு தொழில் புரிபவர்களுக்கு வட்டி மானியத்துடன் கூடிய கடன்கள் ..

புதன், 18 செப்டம்பர் 2019 (20:22 IST)
வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வீட்டுக்கடன், வாகனக்கடன்களுக்கு குறைந்த வட்டியும், சிறுகுறு தொழில் புரிபவர்களுக்கு வட்டி மானியத்துடன் கூடிய கடன்கள் யூகோ வங்கியில் வழங்கப்பட்டு வருவதாகவும் கரூரில் யூகோ (UCO) வங்கியின் மண்டல மேலாளர் செல்வி சி.ஏ.நாகரத்னா பேட்டி
கரூர் யூகோ வங்கியின் டவுன் ஹால் மீட்டிங் நிகழ்ச்சி கரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு யூகோ வங்கியின் கோவை மண்டல மேலாளர் செல்வி சி.ஏ.நாகரத்னா தலைமை வகித்தார். 
 
இந்நிகழ்ச்சியில் கரூர் வங்கியின் முதுநிலை மேலாளர் பி.இருசப்பராஜா, திருப்பூர் யூகோ வங்கி முதுநிலை மேலாளர் சதீஸ்குமார், கரூர் யூகோ வங்கி மேலாளர் எம்.கனகராஜ் உள்ளிட்டோரும், கரூர் நகரின் வங்கி கிளையின் வாடிக்கையாளர்களும், டெக்ஸ்டைல் நிறுவன ஏற்றுமதியாளர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு, பயனடைந்தனர். 
 
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து யூகோ வங்கியின் கோவை மண்டல மேலாளர் செல்வி சி.ஏ.நாகரத்னா செய்தியாளர்களிடம் கூறுகையில், தங்களது வங்கி 76 வருடங்களாக இயங்கி வருவதாகவும், 1943 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி இந்தியாவில் மட்டும் 3086 கிளைகள் கொண்டதாகவும், சிங்கப்பூர், ஹாங்காங், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கிளைகளை பிரத்யோகமாக கொண்டது என்றும், ஏற்றுமதியாளர்களுக்கு அரசு கொடுக்கும் 5 சதவிகித வட்டி மானியம் எங்களது வங்கி வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். 
 
மேலும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வீட்டுக்கடன் மற்றும் வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுவதாகவும், இதே போல, விவசாய பெருங்குடி மக்களுக்கு குறுகிய கால பயிர்க்கடன்களும், சிறுகுறு தொழில்முனைவோருக்கு வட்டி மானியத்துடன் கடன் வழங்கப்படுகின்றது என்றும் தெரிவித்த செல்வி  சி.ஏ.நாகரத்னா., தமிழகத்தில் மட்டும் இரண்டு மண்டலங்களை கொண்ட இந்த வங்கி, சென்னை, கோவை ஆகிய மண்டலங்களாக பிரித்து, அதில் சென்னையில் 72 வங்கி கிளைகளும், கோவையில் 60 வங்கி கிளைகளும் கொண்டு தமிழகத்தில் இயங்குவதாகவும் தெரிவித்தார். பேட்டியின் போது, திருப்பூர் வங்கி கிளையின் முதுநிலை மேலாளர் சதீஸ்குமார், கரூர் வங்கி கிளையின் முதுநிலைமேலாளர் இருசப்பராஜா ஆகியோர் உடனிருந்தனர். c

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்