ரஜினிக்கு விதிக்கப்பட்ட ரூ.66.22 லட்சம் அபராதம் ரத்து: அதிரடி உத்தரவு

செவ்வாய், 28 ஜனவரி 2020 (19:27 IST)
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை கணக்குகளை முறையாக காட்டவில்லை என்றும் வருமான வரியும் முறையாக செலுத்தவில்லை என்றும் அவருக்கு ரூ.66.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நடிகர் ரஜினிக்கு விதிக்கப்பட்ட இந்த அபராதத்தை வருமானவரி தீர்ப்பாயம் ரத்து செய்த‌து. 
 
வருமானவரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்த‌து. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நடிகர் ரஜினிக்கு விதிக்கப்பட்ட ரூ.66.22 லட்சம் அபராதம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
 
அபராத தொகை ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக இருக்கின்றது என்பதால் வழக்கை வருமான வரித்துறை திரும்பப் பெற்றதை அடுத்து இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பெரியாரை அவமரியாதையாக ரஜினி பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்