இந்த ஜி.எஸ்.டி, வரியில் 50 சதவீதம் மத்திய அரசுக்கும், 50 சதவீதம் மாநில அரசுக்கும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. ஜி.எஸ்.டி. மூலம் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தில் மத்திய அரசுக்கு ரூ.9.8 லட்சம் கோடி கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி. அதிகம் வசூலான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடத்தை பிடித்திருக்கிறது.
மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி மூலம் அதிக வருவாயை ஏற்படுத்திய மாநிலங்களில் முதல் இடத்தில் மராட்டியமும் (16 சதவீதம்), இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும் (10 சதவீதம்), மூன்றாவது இடத்தில் கர்நாடகமும் (9 சதவீதம்) இடம் பெற்றிருக்கிறது.