சந்தியாவின் உடலை பேப்பர் கட்டிங் மெஷினை வைத்து வெட்டினேன்: கணவர் பகீர் வாக்குமூலம்

புதன், 6 பிப்ரவரி 2019 (19:21 IST)
தூத்துக்குடியை சேர்ந்த தனது மனைவி சந்தியாவை கொலை செய்தது எப்படி என்பது குறித்து அவரது கணவர் பாலகிருஷ்ணன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


 
சென்னை ஜாபர்கான்பேட்டையில் எஸ் ஆர் பாலகிருஷ்ணன் மனைவி சந்தியா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில். இவருக்கு சந்தியாவின் நடந்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 20-ஆம் தேதி சந்தியாவை கொன்று உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியுள்ளார். பெருகுடி குப்பை மேட்டில் கிடைத்த கைகளில் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி பால கிருஷ்ணனனை கைது செய்தனர்.
 
விசாரணையில் பாலகிருஷ்ணன் கூறுகையில் சந்தியாவை மரம் அறுக்கும் ரம்பத்தை வைத்து உடலை அறுத்தால் ரத்தம் கொட்டும் என்பதால் பேப்பர் கட்டிங் மெஷினை பயன்படுத்தி உடலை வெட்டினேன். மொத்தம் சந்தியாவை 7 துண்டுகளாக வெட்டினேன். அந்த உடல் பாகங்களை 4 கவர்களில் போட்டு தான் மட்டுமே பல்வேறு இடங்களில் வீசினேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். உடல் பாகம் எங்கே என கேட்டதற்கு கூவம் ஆற்றுக்கே வந்து அடையாளம் காட்டிய பாலகிருஷ்ணனோ தலை பாகம் எங்கே என்பதை மட்டும் கூற மறுக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்