நான் பிச்சை எடுக்கப்போகிறேன்: நடிகர் விஷால் பரபரப்புப் பேட்டி

வெள்ளி, 14 டிசம்பர் 2018 (08:23 IST)
கஜா புயலால் பாதித்த மக்களுக்கு உதவ தாம் பிச்சை எடுக்கவும் தயார் என நடிகர் விஷால் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில கடப்பா மாநிலத்தை சேர்ந்த ஆயிஷா என்ற சிறுமி கல்லீரல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். ஆபரேஷன் செய்ய அவரிடம் போதிய பண வசதி இல்லை. அந்த சிறுமியின் உயிரைக் காப்பாற்ற 1914 பேர் சுமார் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினர்.
இதனையடுத்து சிறுமிக்கு சென்னை குலோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று சிகிச்சை நடைபெற்றது. சிறுமி தற்பொழுது நலமாக இருக்கிறார். இதற்கிடையே ஏழை மாணவிக்கு எங்கள் மருத்துவமனை உதவுயது என தங்களின் மருத்துவமனையை விளம்பரப்படுத்த மருத்துமனை நிர்வாகம் ஒரு விழாவை நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டார்.
 
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஷால், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க நான் 5 லட்சம் ரூபாயை சம்பளமாக பெற்றேன். ஒரு நல்ல விஷயத்திற்காக பணம் வாங்குகிறேன் என கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் இந்த 5 லட்சம் ரூபாயும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக கொடுப்பேன். மக்களுக்கு தொடர்ந்து உதவுவேன். இதற்காக நான் பிச்சை எடுக்கவும் தயாராக இருக்கிறேன் என உணர்ச்சி பொங்க விஷால் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்