இந்துக்கள் தான் அதை செய்ய வேண்டும்: மீண்டும் அறநிலைத்துறையை வம்பிழுத்த எச்.ராஜா!!

வியாழன், 4 அக்டோபர் 2018 (10:48 IST)
அறநிலைத்துறை இந்து மதத்தையும், இந்துக்களையும் அழிக்கும் துறையாக இருக்கிறது என ஹெச்.ராஜா கூறியிருக்கிறார்.
எச்.ராஜா சர்ச்சையான கருத்துக்களை பேசுவதை ஃபுல் டைம் ஜாப்பாகவே செய்து வருகிறார். பின்னர் பேசியது நான் இல்லை என் அட்மின் என்றும், அது எடிட் செய்யப்பட்டது எனவும் கோக்குமாக்கு பண்ணிவருகிறார்.
 
சமீபத்தில் அறநிலைத்துறை அதிகாரிகள் குறித்தும், அவர்களின் குடும்பத்தார் குறித்தும் அவதூறாக பேசியதற்காக, ஹெச்.ராஜாவை கைது செய்யக்கோரி அறநிலைத்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா அதிரடியாக சிலைகளை கைப்பற்றும் பொன்.மாணிக்கவேலுக்கு என் வாழ்த்துக்கள். சிலை கடத்தலுக்கு முக்கிய காரணமே இந்த அறநிலைத்துறை ஊழியர்கள் தான்.
 
அறநிலைத்துறை இந்து மதத்தையும், இந்துக்களையும் அழிக்கும் துறையாக இருக்கிறது. வேற்று மதத்தவர் அறநிலைத்துறையில் வேலை செய்யக்கூடாது என கூறினார். ஏற்கனவே எச்,ராஜா மீது பயங்கர கோபத்தில் இருக்கும் அறநிலைத்துறை ஊழியர்கள், ராஜாவின் இந்த கருத்திற்கு என்ன ரியாக்‌ஷன் கொடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்