தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடந்த சில நாட்களாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதேபோல் பழைய அருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவிகளிலும் நீர் வரத்து குறைந்துள்ளபோதும் பொதுமக்கள் ஆர்வத்துடன் குளிப்பதற்காக வருகை தருகின்றனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருப்பதால், போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வனத்துறையினரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.