எடப்பாடி பழனிச்சாமி அணியில் ஓபிஎஸ் இணைந்ததை அடுத்து அதிமுக கட்சியில் இருந்து சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை நீக்க முடிவு செய்தனர். இதற்காக நாளை பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. வெற்றிவேல் தனிப்பட்ட முறையில் இந்த மனுவை தாக்கல் செய்ததாகவும், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகவும் கூறியதோடு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நாளை பொதுக்குழு கூட்டம் நடப்பது உறுதியாகிவிட்டது. இதற்காக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,780 பேர் மற்றும் செயற்குழு உறுப்பினர் 250 பேர் ஆகியோருக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.