இன்று இரவு 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. பட்டாசு வெடிக்க முடியாதா?

ஞாயிறு, 12 நவம்பர் 2023 (15:36 IST)
இன்று இரவு 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து இன்று இரவு பட்டாசு மற்றும் மத்தாப்பு வெடிக்க முடியாதா என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இன்று தீபாவளி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காலை 2 மணி நேரம்,இரவு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு மழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்