சென்னை இன்று மாலை பல இடங்களில் குறிப்பாக ஆவடி, அம்பத்தூர், வளசரவாக்கம், ராமபுரம், கோயம்பேடு மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது.