கனமழை எதிரொலி.! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.!!

Senthil Velan

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (09:17 IST)
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் நன்றாக உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர், இதமான தென்றல் காற்று போன்ற காரணங்களால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவதால் சீசன் களைகட்டியது. 
 
இந்நிலையில் நேற்று மாலை முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.   இதனால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி மற்றும் மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 


ALSO READ: தண்டனை கைதிகளின் மனு.! சிறைத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை..!!
 
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர். பழைய குற்றாலம் மற்றும் புலி அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்