சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச் செல்வி (28) என்பவர் மன்னார்குடி அரசு விரைந்து பேருந்தில் சென்றுள்ளார். அப்போது கும்பகோணம் அருகே பேருந்து சென்றபோது, பேருந்து நடத்துநர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, பேருந்தை நிறுத்திய தமிழ்ச்செல்வி, பேருந்தைவிட்டு இறங்கி காவல்நிலையத்துக்குச் சென்று, இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.